|
சுனாமி உதவி கரம் |
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ல் தமிழகம் மட்டுமல்லாது தெற்காசிய கடற்கரையோரம் லட்சக்கணக்கான மக்கள் நொடியில் மரணமடையக் காரணமாக இருந்து சுனாமி. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, குமரி உள்ளிட்ட பகுதிகளில் மனித உயிர்களை மொத்தமாக கடலுக்குள் இழுத்துச் சென்றன ஆழிப் பேரலைகள். சுனாமியால் இழந்த உயிர்களை நம்மால் திருப்ப இயலாது.. குறைந்த பட்சம் இழந்த உடைமைகளையாவது திருப்பி தர முயற்சி செய்யலாம். அந்த மறுவாழ்வுப்பணிகளில் பல வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவிகரம் நீட்ட முன் வந்தது இதன் அடிப்படையில் ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து எவ்வளவோ உதவிகள் செய்து இருந்தாலும் நாங்கள் வசிக்கும் ஊரில் அதிகமான இந்தியாவையும், இலங்கையையும் சார்ந்த தமிழர்கள் வசிப்பதால் நமக்கும், நமது மக்களுக்கும் மரியாதை செலுத்தும் வண்ணம் நமது நகர தந்தை (மேயர்) கொம்யூன் சபையை கூட்டி அதில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய அளவிலாவது மறுவாழ்வு உதவிக்கு உதவிட முன்வந்து நமது சங்கத்தை அனுகினார்கள். அதன் அடிப்படையில் மூன்று வீடு கட்டி தருவதற்கு உண்டாகும் செலவுகளை நம்மிடம் கேட்டு இருந்தார்கள். நாம் உடன் தஞ்சையில் உள்ள லயன்ஸ் கிளப்பின் உதவியை நாடினோம். அவர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த பணியினை முடிக்கிவிட, அவர்களின் குழுக்கள் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ததில் நாகப்பட்டினத்திற்கு அருகாமையில் உள்ள பறவை என்ற சிறிய கிராமத்து பஞ்சாயத்திடம் நமது சங்கத்தின் உதவியை எடுத்து விளக்கி சொன்னவுடன் அவர்களாகவே இடம் கொடுப்பதற்கு முன் வந்தார்கள். பின்பு நமக்கு அதனுடைய முழு விவரத்தையும் மற்றும் அதன் செலவினங்களையும் எழுத்து மூலம் தெரியபடுத்தினார்கள். அதன் பின் இந்த தகவலை நாம் கொம்யூன்பஞ்சாயத்து சபையில் சமர்ப்பித்தோம். இந்த தகவலின் அடிப்படையில் கொம்யூன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்து அதற்குண்டான தொகையை நமக்கு அளிக்க அதை நாம் லயன்ஸ் கிளப்பின் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைத்தோம். |
||
|
|
---|
|
---|
|
|
---|
|
---|
|
|
---|
|
---|
copyright © 2005 amtcfrance.com All rights reserved |