testமுதல் பக்கம்

 

  பைய்த்துல்மால்  

கடந்த ரமலான் மாதத்தில் நமது சங்கத்திற்கு இந்தியாவிலிருந்து விஜயம் செய்த ஹஜ்ரத் சாலிஹ் அவர்களின் மிகுந்த ஆவலுடன் செய்த நல் உபதேசத்தின் பேரில் இந்த பைய்த்துல்மால் என்ற ஏழைகளுக்கு உதவிடும் பணியினை இச்சங்கம் கீழ்கண்ட செயல்பாடுகளுடன் தொடங்கியுள்ளது, இதில் தாங்களும் கலந்துக் கொண்டு பொருளாதார உதவி செய்து வறுமையில் வாடும் நமது சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு உருதுணையாக இருந்து ஈருலக வெற்றியடைய வல்ல ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக ஆமீன்.

 

 

 
பைய்த்துல்மாலின் செயல்பாடுகள் :-
 
 



ஜகாத்:

- ஜகாத் இறைவனால் மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஃபர்லான ஐந்து கடமைகளில் ஒன்று.
- ஜகாத்தைப் பெற தகுதியுடையோரை (தனி, தனி நபர்) கண்டறிந்து ஒரு இமாமின் வழிக்காட்டுதலின் பேரில் பைத்துல்மாலின் ஆலோசனைக் குழுவின்படி செலவு செய்ய வேண்டும்.
- பகிரங்கமாகவோ, ரகசியமாகவோ (Gift மாதிரி)


சதக்கா:

- ஒரு முஸ்லிமுக்கு சமுதாயத்தின் மீதுள்ள கடமை. இதர உதவிகளுக்கு (வட்டியில்லா கடன், பெண்ணின் திருமணச் செலவு, பள்ளி மாணவருக்கு உதவித்தொகை, மதரஸாக்கள், பள்ளிவாசல், மருத்துவச்செலவு, இன்னும் பற்பல). இது பைத்துமாலின் ஆலோசனைக் குழுவின்படி வழங்கப்படும்.

உதவிக் கோருவோரிடம்.......
(1) பள்ளிவாசல்,
(2)மதரஸா,
(3) தனிநபர் அவர்களிடமிருந்து தக்கச் சான்றிதழ் பெற வேண்டும்
(4) பிரான்ஸ் நாட்டில் மைய்யத்து அடக்கம் செய்வதற்கான செலவுகளுக்காக உதவி கோருபவர்களுக்கு கடன் உதவி செய்தல்


சதக்கத்துல் ஃபித்ரு:

- இது ஏழை எளியோருக்குப் பெருநாளை சந்தோஷமாக தன் சகோதர முஸ்லிமுடன் பகிர்ந்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நமக்கு அளித்த கடமை. இதை ரமலானின் முற்பகுதியில் (பிறை 25-க்குள்) வழங்கச் செய்து பிற்பகுதியில் பெருநாளைக்கு முன்பாக செலவு செய்தல். (உணவாகவோ, உடையாகவோ அல்லது பணமாகவோ)

 

 

 

 

 

copyright © 2005 amtcfrance.com All rights reserved